சுதேசி விழிப்புணர்வு யாத்திரை
தொடக்கம் : 5.3.2012 - கோயம்புத்தூர் நிறைவு : 5.4.2012 – சென்னை
அன்புக்குரிய ஆர்வலர்களுக்கு,
இனிய வணக்கங்கள்கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவை நாம் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை இழக்கும் வகையிலும், நமது அடிப்படை வாழ்வாதரங்களை அந்நிய நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் தாரை வார்க்கும் வகையிலும் இருந்து வருகின்றன என்பது கண்கூடு. அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து, விவசாயம், வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரத் தொழில்களை மீட்கவும், மண்ணின் மைந்தர்களின் ஆதார பலங்களையும், அனுபவ அறிவு வளங்களையும் புரிந்து கொள்ளவும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பாக இந்த விழிப்புணர்வு பாத யாத்திரை மேற்கொள்ளப் படுகிறது.
இந்த யாத்திரையில்
1) சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய மூதலீடு என்ற ஆபத்திலிருந்து நமது வர்த்தகத்தைக் காப்பாற்றல்.
2) முழுமையாக அந்நியரின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கும் நமது விவசாயத்தை மீட்டெடுத்தல்.
3) வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டுவருதல்.
கேரளாவில், பிளாச்சிமடாவில் இயங்கி வந்த கோகோ கோலா நிறுவனம், அந்த கிராமத்தில் வாழ் மக்களுக்கு ஏற்படுத்திய கெடுதல்களுக்கு நஷ்ட ஈடாக தர வேண்டிய 216.26 கோடி ரூபாயை தடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய சுதேசி விழிப்புணர்வு இயக்க அமைப்பாளரும், பிளாச்சிமடா போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கே.வி. பிஜு கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று கைது செய்யப் பட்டார்.
Walmart's entry into India will mean profits for the Americans and jobs for the Chinese, says Mohan Guruswamy.
Foreign investment is invariably beneficial as it creates jobs, adds value, and contributes to the GDP.
Companies like Hyundai, Ford and Honda have built a giant automobile industry in India now producing over 2 million cars and tens of thousands of new jobs.
By 2017 India will emerge as the third-largest car-making country in the world, producing over 7 million automobiles. This would not be possible without foreign investment, technology and leadership.